கார்த்தி கேரியரில் முக்கியமான படம்! - சூர்யா

கார்த்தி கேரியரில் முக்கியமான படம்!  -  சூர்யா

செய்திகள் 24-Jun-2014 11:56 AM IST Inian கருத்துக்கள்

‘ஸ்டுடியோ கிரீன்’ தயாரிப்பில் ‘அட்டகத்தி’ தினேஷ் இயக்கியுள்ள படம் ‘மெட்ராஸ்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டல் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிவகுமார், சூர்யா, ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா, ’மெட்ராஸ்’ படக் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சூர்யா பேசியதாவது,

‘‘மெட்ராஸ்’ படத்தோட ட்ரைலர் பார்த்தேன். ரொம்பவும் இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு. அதனால நான் இந்த ஆடியோ ரிலீஸ்ல எப்படியாவது கலந்துக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். கார்த்தி நிறைய படங்கள் பற்றி பேசிக்கிட்டேயிருப்பார். ‘மெட்ராஸ்’ படத்தை பற்றி நிறையவே பேசியிருக்கிறார். இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் ‘ஸ்டுடியோ கிரீனு’க்கு வந்தபோது யார், யாரெல்லாம் இந்தப் படத்துல நடிக்கலாம் என பேச்சு வார்த்தைகளெல்லாம் போய் கொண்டிருந்தது. ஒரு நாள் இந்த ஸ்கிரிப்ட்டை படித்த கார்த்தி, நான் ஏன் இந்த ஸ்கிரிப்ட்டை பண்ணக்கூடாது, என்று எடுத்து பண்ணிய படம் தான் இது.

‘பருத்திவீரன்’, ‘சுப்பிரமணியபுரம்’ படங்களை பார்க்கும்போது என்ன ஒரு இம்பாக்ட் கிடைத்ததோ அதே மாதிரி ‘மெட்ராஸ்’ படத்தோட ட்ரைலர் பார்க்கும்போது ஒரு ஃபீல் வருது. வடசென்னை பற்றிய நிறைய படங்கள் வந்திருக்கு. ஆனால் அதிலிருந்தெல்லாம் மாறுபட்டு இந்தப் படத்தில இயக்குனர் ரஞ்சித் பதிவு செய்திருக்கிற விஷயங்கள் பிரமாதமாக இருக்கு. அதுக்கு ரஞ்சித்துக்கு நன்றி சொல்லணும். நிறைய நல்ல படங்கள் வந்துகிட்டிருக்கு. அதுல கார்த்தியோட இந்தப் படமும் வருவது சந்தோஷமாக இருக்கு. இந்தப் படம் கார்த்தியை அடுத்த பரிமாணத்துக்கு கொண்டு செல்லும் படமா என்னால உணரமுடியுது. கார்த்தியோட கேரியர்ல ஒரு முக்கியமான படமாவும் இது அமையும்.

இந்தப் படத்தோட ஷூட்டிங் பற்றி கார்த்தி சொல்லும்போது, ‘நான் மட்டும் தான் சீனியரா இருக்கிறேன். மத்தவங்க எல்லோரும் என்னை விட சின்னவங்களா இருக்காங்க. ஆனால் அவங்க நடிக்கிறது யதார்த்தமாகவும், அழகாகவும் இருக்கு. நான் உஷாரா இருக்கவேண்டியதா இருக்கு! அவங்க நல்லா நடிக்கும்போது, நான் சினிமாட்டிக்கா நடிக்கக் கூடாதுன்னு கேர்ஃபுல்லா இருக்க வேண்டியதா இருக்கு’’ என்று பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் இந்தப் படத்தில் கார்த்தி போட்டிப் போட்டு நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தி வேற மாதிரியான ஒரு நடிகரா தெரிவார்! இந்தப் படத்தோட மொத்த டீமுக்கும் என்னோட’’ வாழ்த்துக்கள் என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;