‘கள்ளப்பட’த்தில் புதிய முயற்சி!

‘கள்ளப்பட’த்தில் புதிய முயற்சி!

செய்திகள் 24-Jun-2014 11:29 AM IST Top 10 கருத்துக்கள்

வடிவேல் இயக்கி வரும் படம் ‘கள்ளப்படம்’. இந்தப் படத்திற்கு இசை அமைப்பவர் கே. இவர் இந்தப் படத்தில் ஒரு புதுமையை செய்ய விரும்பி, அதை செயதும் காட்டியிருக்கிறார். அதாவது ஒரு பாடலின் உள்ளே இன்னொரு பாடல்! இது குறித்து இசை அமைப்பாளர் கே கூறும்போது, ‘‘கள்ளப்படம்’ திரையுலகை பற்றிய ஒரு கதை. அதில் காட்சிப்படி கூத்து பட்டறையை பற்றி படமாக்க வேண்டி இருந்தது. அந்த காட்சி அமைப்புக்குள் நவீன இசை அமைப்பின் பங்கையும் வெளிப்படுத்த வேண்டி இருந்தது. இயக்குனர் வடிவேலு மற்றும் படக்குழுவினர் அத்தனை பேருக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது. அவர்கள் அத்தனை பேரும் இதற்கு முழு ஆதரவும் தந்தனர். அதன் படி அந்த பாடலை உடனே பதிவு செய்யப்பட்டது. இதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து கூத்துப்பட்டறை பாடல் குழுவினரையும், நவீன இசை கலைஞரான கிடாரிஸ்ட் விக்ரம் குழுவினரையும் அழைத்து வந்தௌ அந்த பாடலை பதிவு செய்தோம். மாறுபட்ட வகையில் அமைந்துள்ள இப்பாடல் ரசிகர்களை கண்டிப்பாக கவரும் என்பதில் ஐய்யமில்லை’’ என்கிறார் இசை அமைப்பாளர் கே.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;