பொங்கலுக்கு வருகிறது விக்ரம் படம்!

பொங்கலுக்கு வருகிறது விக்ரம் படம்!

செய்திகள் 24-Jun-2014 10:57 AM IST VRC கருத்துக்கள்

மிக குறுகிய காலகட்டத்தில் பல வெற்றிப் படங்களை வழங்கிய நிறுவனம் ‘ பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’. தற்போது இந்த நிறுவனமும், ஏ.ஆர்.முருகதாசின் ‘ஏ.ஆர்.எம்.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படத்தை விஜய் மில்டன் கதை, திரைகதை அமைத்து, ஒளிப்பதிவு செய்து இயக்கி வருகிறார். விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு இன்னும் அதிகாரபூர்வமாக பெயர் வைக்கவில்லை. இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ‘கோலி சோடா’ படத்திற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்ததை தொடர்ந்து நேற்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இமான் இசை அமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்க்கி பாடல்கள் எழுத, பெரும் பொருட் செலவில் இப்படம் தயாராகி வருகிறது. ‘ஐ’ படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம், ‘கோலி சோடா’ படத்திற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கும் படம், விக்ரமுடன் சமந்தா ஜோடி சேரும் முதல் படம் என பல ஸ்பெஷல்களுடன் உருவாகி வரும் இப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், அதாவது பொங்கலையொட்டி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பு தரப்பினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;