விஜய் பிறந்த நாள், கேக்கை வெட்டும் கத்தி!

விஜய் பிறந்த நாள், கேக்கை வெட்டும் கத்தி!

செய்திகள் 21-Jun-2014 5:07 PM IST VRC கருத்துக்கள்

’ஜில்லா’வின் 100 நாட்கள் வெற்றியை தொடர்ந்து மற்றொரு மாபெரும் வெற்றிக்கு ’கத்தி’யை தீட்டிக் கொண்டிருக்கிறார் இளைய தளபதி! விஜய் நடிக்கிறார் என்றாலே படத்துக்கு படம், எதிர்பார்ப்பு டபுள் மடங்காகி கொண்டிருக்க, ‘கத்தி’யும் உச்ச எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. ‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு விஜய், முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள படம், விஜய் டபுள் ரோலில் நடிக்கும் படம், அனிருத் இசை அமைக்கும் முதல் விஜய் படம், சமந்தா விஜய்யுடன் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் என பல ஸ்பெஷல்கள் உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள ‘கத்தி’யின் வேலைகளை துரிதப்படுத்தியுள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் புரமோஷன் வேலைகளையும் ஆரம்பித்து விட்டார்! நாளை (ஜூன் -22) இளைய தளபதியின் பிறந்த நாள்! விஜய்யின் பிறந்த நாளையொட்டி ‘கத்தி’ படத்தின் ஃபஸ்ட் லுக்கை வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க இருக்கிறார் இயக்குனர் முருகதாஸ் உட்பட ‘கத்தி’ பட டீம்!

லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் நல் வாழ்த்துக்களுடன் நாளை பிறந்த நாள் கேக்கை கட் பண்ண இருக்கும் ‘கத்தி’ நாயகனுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது. ஹேப்பி பர்த் டே விஜய்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;