அஜித், ராணா - மீண்டும் ஒரு ஆரம்பம்!

அஜித், ராணா - மீண்டும் ஒரு ஆரம்பம்!

செய்திகள் 21-Jun-2014 4:02 PM IST VRC கருத்துக்கள்

அஜித்தும், ’வீரம்’ பட இயக்குனர் சிவாவும் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பது சிவா தான் என்கிறார்கள்! இந்தப் படத்தில் ராணாவும் அஜித்துடன் இணைந்து நடிக்கவிருக்கிறாராம். இதற்கான கதை விவாதம் தற்போது சூடு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவா இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கில் 5 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கும் படங்களுக்கு தமிழிலும், தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் அஜித் - ராணா இணையும் இந்தப் படத்தையும் தமிழ், தெலுங்கு என உருவாக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அத்துடன் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. காரணம், சமந்தா இப்போது தமிழ், தெலுங்கில் மோஸ்ட் வான்டட் நடிகையாக இருப்பதால் படத்தின் மார்க்கெட்டிங்கிற்கு அவர் பெரிதும் உதவுவார் என்றும் நம்புகின்றனர். ராணா ஏற்கெனவே அஜித்துடன் விஷ்ணுவர்தன் இயக்கிய ‘ஆரம்பம்’ படத்தில் நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்! அஜித், சிவா இணைந்த ‘வீரம்’ தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்றதால், மீண்டும் இணையும் இந்த கூட்டணி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;