‘கதாநாயகி தேர்வு செய்யப்படவில்லை’ - தியாகராஜன்

‘கதாநாயகி தேர்வு செய்யப்படவில்லை’ - தியாகராஜன்

செய்திகள் 21-Jun-2014 12:44 PM IST Top 10 கருத்துக்கள்

கங்கணா ரணாவத் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்து உலகம் முழுவதும் வெற்றிப் பெற்ற படம் ‘குயின்’. இப்படத்தைப் பார்த்த நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன், தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் ’குயின்’ படத்தை ரீ-மேக் செய்யும் உரிமையை பெற்றுள்ளார். இன்று தியாகராஜன் பிறந்த நாள்! இதை முன்னிட்டு அவர் இன்று காலை தன்னுடைய நண்பர்கள், அலுவலர்கள், சினிமா பத்திரிகை தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது ‘குயின்’ படத்தை ரீ-மேக் செய்வது குறித்து அவர் கூறியதாவது,

‘‘ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘குயின்’. இது அனைவரும் பார்க்க வேண்டிய படமாகும். உலகம் தெரியாத ஒரு பெண் பிரச்சனைகளை தன்னந்தனியே எதிர்கொள்ளும் கதையாகும். இந்தப் படத்தை பார்த்தவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. இதை தமிழில் மட்டுமின்றி அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் எடுக்கவுள்ளேன்.

‘குயின்’ படத்தை தமிழில் ’ராணி’ என்ற பெயரில் எடுக்கபடவுள்ளது. இப்படத்தில் நடிக்கவுள்ள கதாநாயகி குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அது தவறான செய்திகள். கதாநாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பல இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். இப்படமும் அறிமுக இயக்குனரால் இயக்கப்படும். அது இல்லாத பட்சத்தில் நானே இயக்கவும் தயாராகவுள்ளேன். விரைவில் இது சம்பந்தமான மற்ற செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - பாடல் வீடியோ


;