இறுதி கட்டத்தில் அஞ்சான்!

இறுதி கட்டத்தில் அஞ்சான்!

செய்திகள் 21-Jun-2014 11:25 AM IST Top 10 கருத்துக்கள்

லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே 99 சதவிகிதம் முடிந்து விட்ட நிலையில், ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் மீதி இருந்தது. அந்த காட்சிகளை இன்று மும்பையிலுள்ள வாசை துறைமுகத்தில் படம் பிடிக்கிறார்கள். இத்துடன் ‘அஞ்சான்’ படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து விடுமாம்! இந்தத் தகவலை ‘யுடிவி’ தனஞ்சயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும், ‘யுடிவி’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ‘சிங்கம் 2’ படத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் இது என்பதால் இப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆக்ஸ்ட்-15 வெளியீடாக ‘அஞ்சான்’ திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;