’ஆ’வை தொடர்ந்து ‘ரு’

’ஆ’வை தொடர்ந்து ‘ரு’

செய்திகள் 20-Jun-2014 12:38 PM IST VRC கருத்துக்கள்

‘ஆ’ என்ற ஒற்றை எழுத்துடைய பெயரில் ஒரு திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்க, ‘ரு’ என்ற ஒற்றை எழுத்துடைய மற்றுமொரு படமும் தயாராகி வருகிறது. இந்தப் படம் குறித்து தரப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘ரு' என்ற தமிழ் எழுத்துக்கு ஐந்து என்றும் ஒரு அர்த்தம் உண்டு! இதிகாசம் முதல் சமீபம் வரை ஐந்து என்ற எண் மிகவும் முக்கியத்துவம் உள்ள எண்ணாகவே பார்க்கப்படுகிறது. சமூகத்தில் வாழ கூடாத, வாழ தகுதி இல்லாத ஐந்து மனித மிருகங்களை வேட்டையாட விழைகிறான் ஒரு இளைஞன். சினிமாவில் நாயகனாக வர கனவு காணும் அவன் , நிஜ வாழ்வில் நாயகனாக ஆகிறானா என்பதை அந்த ஐந்து பேர்தான் தீர்மானிக்கின்றனர். சர்வதேச அரங்கில் நமது நாடு தலை குனிய வைக்கும் ஒரு மிக பெரிய சமூக அவலத்தை படம் பிடித்து காட்டும் 'ரு ' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. தொலைக் காட்சி தொடர் மூலம் அறிமுகமாகி , இன்று திரை உலகில் கால் ஊன்றி நிற்கும் இர்பான் தான் 'ரு ' படத்தின் கதாநாயகன். இவருடன் கதாநாயகியாக ரக்‌ஷிதா நடிக்க, ஆதவன், பேரரசு, மீரா கிருஷ்ணா முதலானோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சதாசிவம் இயக்கியிருக்க, ஸ்ரீநாத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;