நடிகை மீனா தந்தை காலமானார்!

நடிகை மீனா தந்தை காலமானார்!

செய்திகள் 20-Jun-2014 12:05 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாகவும் நடித்தவர் மீனா! இவரது தந்தை துரைராஜ். தாய் ராஜ்மல்லிகா. துரைராஜ் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர்! இவருக்கு நேற்று இரவு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் காலமானார். அவருக்கு வயது 67. துரைராஜ் - ராஜ்மல்லிகா தம்பதியருக்கு மீனா ஒரே மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மீனாவின் வீடு சைதாப்பேட்டை நீதிமன்றம் பின்புறம் உள்ள ஸ்ரீநகரில் உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - டீசர்


;