ராஜ்கிரண் வெளியிடும் ‘சிவப்பு’

ராஜ்கிரண் வெளியிடும் ‘சிவப்பு’

செய்திகள் 19-Jun-2014 3:48 PM IST Top 10 கருத்துக்கள்

‘புன்னகைப் பூ’ கீதாவின் ‘எஸ்.ஜி.பிலிம்ஸ்’ முக்தா ஆர். கோவிந்தின் ‘முக்தா என்டர்டெயின்மென்ட்’ பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சிவப்பு’. நவீன்சந்திரா, ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்து ‘கழுகு’ சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தை ராஜ்கிரண் பார்த்து பரவசமாகி விட்டாராம். ‘மஞ்சப்பை’ படம் தனக்கு மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்தது மாதிரி ‘சிவப்பு’ படமும் தனக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று நம்பியுள்ளார் ராஜ்கிரண். இலங்கை அகதிகளின் வாழ்க்கைப் பதிவாக உருவாகியுள்ள இப்படத்தை ராஜ்கிரண் வாங்கி திரையிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அடுத்த மாதம் திரைக்கு வருகிறது ‘சிவப்பு’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பவர் பாண்டி - சூரக்காத்து பாடல் வீடியோ


;