தலைகீழாக தொங்கிய நவீன்சந்திரா!

தலைகீழாக தொங்கிய நவீன்சந்திரா!

செய்திகள் 19-Jun-2014 3:42 PM IST VRC கருத்துக்கள்

வெற்றிப்பட நிறுவனமான ‘திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட்ஸ்’ தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிப்பில் வெளிவரவுள்ள படம் ‘சரபம்’. கௌதம் மேனனின் உதவியாளரும், பிரபல வசனகர்த்தாவும், நடிகருமான அனுமோகனின் மகன் அருண்மோகன் இப்படத்தை இயக்கி, இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் நவீன்சந்திரா, சலோனி இணைந்து நடித்துள்ளனர். ஒளிப்பதிவு செய்திருப்பவர் கிருஷ்ணன் வசந்த். இசையமைத்திருப்பவர் பிரிட்டோமைக்கேல். இப்படம் குறித்து இயக்குனர் அருண் மோகன் கூறும்போது,

‘‘சிங்கமும், பறவையும் சேர்ந்த உருவத்தைத் தான் சரபம் என்கின்றனர். படத்தை பார்க்கும்போது படத்திற்கான டைட்டில் சரியானது தான் என உங்களுக்குத் தோன்றும். இதுவொரு ‘க்ரைம் டிராமா’. நவீன்சந்திரா, சலோனி, நரேன் இவர்கள் மூன்று பேருக்கும் நடக்கும் ஒரு விஷயம் தான் கதை. மூன்று பேருமே போட்டி போட்டு நடித்துள்ளனர். திரைக்கதையமைப்பு விறுவிறுப்பாக இருக்கும். இந்த படத்தில் ஒரு ரிஸ்க் ஷாட் எடுத்துள்ளோம். வேளச்சேரியருகே இருக்கும் 15 மாடி கட்டிடம் ஒன்றில் நவீன் சந்திரா தலைகீழாக தொங்கியபடி நடிப்பது மாதிரியான காட்சியில் அவர் ஒட்டு மொத்த யூனிட்டையும் ஆச்சர்ய படுத்தினார். டெடிகேஷன் உள்ள நடிகர். விரைவில் வெளியாகவுள்ள இப்படம் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர் 2


;