மீண்டும் சுந்தர்.சி.யுடன் இணையும் ஹன்சிகா!

மீண்டும் சுந்தர்.சி.யுடன் இணையும் ஹன்சிகா!

செய்திகள் 19-Jun-2014 3:23 PM IST VRC கருத்துக்கள்

சுந்தர்.சி. இயக்கத்தில், ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ மற்றும் ‘அரண்மனை’ ஆகிய படங்களில் நடித்துள்ள ஹன்சிகா மோத்வானி மூன்றாவதாக மீண்டும் சுந்தர்.சி. இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க, அவருடன் முதன் முதலாக ஜோடி சேருகிறார் ஹன்சிகா! தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், அதாவது அநேகமாக செப்டம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள்! ஏற்கெனவே சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அது மாதிரி தற்போது ‘வாலு’, ‘அரண்மனை’, ‘மீகாமென்’, ‘ரோமியோ ஜூலியட்’ என பல படங்களை கையில் வைத்து படு பிசியாக நடித்து வருகிறார் ஹன்சிகா! இதில் சிம்புவுடன் ஜோடியாக நடித்திருக்கும் ’வாலு’ திரைப்படம் விரைவில் ரிலீசாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;