U-க்காக காத்திருக்கும் ‘அரிமா நம்பி’

U-க்காக காத்திருக்கும் ‘அரிமா நம்பி’

செய்திகள் 19-Jun-2014 10:56 AM IST Top 10 கருத்துக்கள்

இளம் தலைமுறை நடிகர்களில் குறிப்பிடத்தக்க இடத்தில் இருப்பவர் விக்ரம் பிரபு. ‘கலைப்புலி’ தாணு தயாரிப்பில் இவர் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் ‘அரிமா நம்பி’. ‘டிரம்ஸ்’ சிவமணி இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படம் சமீபத்தில் விநியோகஸ்தர்களுக்கு திரையிடப்பட்டது. ‘குடும்பத்துடன் பார்த்து ரசிப்பதற்கேற்ற படம் இது’ என்று படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் தாணுவிடம் கூறினார்களாம்! மேலும் வேகமாக வளர்ந்து வரும் விக்ரம் பிரபுவிற்கு இப்படம் நல்ல பெயரை பெற்றுத்தரும் என்றும் கூறினார்களாம்! ஆனால் சமீபத்தில் சென்ஸாருக்கு சென்ற இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் தான் வழங்கினார்களாம்! இதனால் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் பெறுவதற்காக படக்குழுவினர் தற்போது முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஏற்கெனவே கிடைத்த ‘U/A’ சர்டிஃபிக்கெட்டா இல்லை ‘U’வா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;