ஹேப்பி பர்த்டே காஜல்!

ஹேப்பி பர்த்டே காஜல்!

செய்திகள் 19-Jun-2014 10:44 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜா அறிமுகம் செய்த பெரும்பாலானோரும் வெற்றிபெற்றுள்ளார்கள்! அந்த வரிசையில் பாரதிராஜா இயக்கிய ‘பொம்மாலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் காஜல் அகர்வால்! ஆனால் காஜல் நடிப்பில் தமிழில் வெளியான முதல் படம் ’பழனி’. இந்தப் படத்தில் பரத்துடன் ஜோடியாக நடித்த காஜல் அகர்வால், தொடர்ந்து சூர்யா, கார்த்தி, விஜய் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தற்போது ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஹீரோ அல்லு அரவிந்துடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்த ‘மகதீரா’ திரைப்படம் இவருக்கு மிகப் பெரும் புகழை ஈட்டித்தந்தது. தற்போது தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக விளங்கி வரும் காஜல் அகர்வால் பிறந்த நாள் இன்று! லட்சக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் காஜல் அகர்வாலுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - மாஜோ ஆடியோ பாடல்


;