56- டிராக் இசையில் ‘கயல்’

56- டிராக் இசையில் ‘கயல்’

செய்திகள் 19-Jun-2014 10:41 AM IST Top 10 கருத்துக்கள்

‘கயல்’ படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருக்கும் பிரபுசாலமன் இப்படத்தினை பற்றி கூறும்போது, ‘இதில் காதல் இருக்கு என்றும் சொல்ல முடியாது, இல்லை என்றும் சொல்ல முடியாது. ஆனால் வழக்கமான படமில்லை. வழக்கமான சினிமாவை ரசிகன் மறந்து பத்தாண்டுகளாகிறது. படைப்பாளிகளும் மறந்து விட்டார்கள். இப்போது வேறு மாதிரியாக, வித்தியாசமான ஒரு பாதையை நோக்கி சினிமா பயணமாகிக் கொண்டிருக்கிறது. சுனாமி தாக்கி சரியாக பத்தாண்டுகளாகி விட்டது. அந்த சுனாமியை ‘கயல்’ படத்தில் கதைக் கருவாக்கியிருக்கிறேன். திரையில் ‘கயல்’ படத்தை பார்க்கும்போது மனசு அப்படியே பதை பதைத்து போகும். இந்தப் படத்தில் 56 - டிராக் இசை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் படத்தை பார்ப்பவர்களுக்கு பல மடங்கு பிரமிப்பூட்டும் விதமாக இருக்கும்.

‘கயல்’ படத்தில ஹீரோயினாக வருபவர் பருவம் அடைந்து, சில மாதங்களே ஆன பெண்! அந்த வேடத்திற்கு எவ்வளவோ பேரை பார்த்தோம். ஆனால் திருப்தி ஏற்படவில்லை. முடிவில் வந்தவர் தான் ஆனந்தி. அவரது முகத்தில் இருந்த குழந்தைத்தனம் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியது. அதே மாதிரி என்னுடனேயே, என் கதாபாத்திரத்திற்கேற்ப பயணமாகிற ஹீரோவாக இருந்தார் சந்திரன். நேரம் காலம் பார்க்காமல் ஒத்துழைக்கிற ஹீரோ. ‘கயல்’ விரைவில் வெளிவரவிருக்கிறது’’ என்றார். அடுத்ததாக சிங்கத்தை மைய்யப்படுத்தி படமெடுக்கவுள்ளாராம் பிரபுசாலமன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் ஆளோட செருப்ப காணோம் - டீசர்


;