‘திருசியம்’ ரீ-மேக்கில் இணையும் கமல் - கௌதமி?

‘திருசியம்’ ரீ-மேக்கில் இணையும் கமல் - கௌதமி?

செய்திகள் 19-Jun-2014 10:35 AM IST Top 10 கருத்துக்கள்

மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்ற படம் ’திருசியம்’. இப்படத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரி-மேக் ஆகிறது. இதில் தெலுங்கு ரீ-மேக்கை ஸ்ரீப்ரியா இயக்க, மோகன்லால் நடித்த வேடத்தில் வெங்கடேஷும், மீனா நடித்த கேரக்டரில் தெலுங்கிலும் மீனாவே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ் ரீ-மேக்கில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். மலையாளத்தில் மீனா நடித்த கேரக்டரில் தமிழில் யார் நடிக்கிறார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், இப்போது அந்த கேரக்டரில் கமலுடன்` கௌதமி நடிக்கிறார் என்று இணையதளங்களில் செய்திகள் வெளியாகியவண்ணம் உள்ளன. இப்போது ‘உத்தம வில்லன்’ படத்தில் பிசியாக இருக்கும் கமல்ஹாசன் இதன் படப்பிடிப்பு முடிந்ததும் ‘திருசியம்’ ரீ-மேக்கில் நடிக்க இருக்கிறார். 1995-ல் வெளியான ‘குருதிப்புனல்’ படம் தான் கமல்ஹாசனும், கௌதமியும் இணைந்து நடித்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள ‘திருசிய’த்தை இயக்கிய ஜித்து ஜோசஃப் தான் தமிழ் ரீ-மேக்கையும் இயக்கவிருக்கிறார். கமலின் ‘உத்தம வில்லன்’ மற்றும் ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரான் தான் ‘திருசியம்’ ரீ-மேக்கிற்கும் இசை அமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;