தென்னிந்தியாவின் நெய்மார் தனுஷ் - அமிதாப் பாராட்டு!

தென்னிந்தியாவின் நெய்மார் தனுஷ் - அமிதாப் பாராட்டு!

செய்திகள் 19-Jun-2014 10:33 AM IST Top 10 கருத்துக்கள்

‘ரான்ஜனா’ படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் ஹிந்தி படம் ‘ஷமிதாப்’. பால்கி இயக்கி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அக்‌ஷரா ஹாசன் நடிக்க, பாலிவுட்டின் ‘பிக் பி’ அமிதாப்பச்சனும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படத்தில் தன்னுடன் நடிக்கும் தனுஷ் பற்றி அமிதாப்பச்சன் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகர் தனுஷும், பிரேசில் கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மாரும் ஒரே மாதிரி இருப்பதாகவும், சூப்பர் ஸ்டார் தனுஷ், 'தென்னிந்தியாவின் நெய்மர்' என்றும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அமிதாப் இந்த கருத்தை ரசிகர்களுக்காக தனது ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார். நெய்மார், இப்போது நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டி மூலம் உலகப் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;