அறிமுக இயக்குனர் இயக்கும் ‘ஆலமரம்’

அறிமுக இயக்குனர் இயக்கும் ‘ஆலமரம்’

செய்திகள் 19-Jun-2014 10:31 AM IST Top 10 கருத்துக்கள்

பட்டணத்தில் பிறந்து, வாழ்ந்து வருபவர்களுக்கு ஆலமரத்தின் முக்கியத்துவம் பற்றி அவ்வளவு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கிராமத்து பின்னணியில் இருந்து வருபவர்களுக்கு ஆலமரத்தின் முக்கியத்துவம் தெரிந்திருக்கும். ஒவ்வொரு ஆலமரமும் தன்னுள் அடக்கி இருக்கும் கதைகள் அதன் விழுதுகளை விட நீளமாகவும், அதன் வேர்களை விட ஆழமாகவும் இருக்கும். இதன் பின்னணியில், ‘பீகாக் பிக்சர்ஸ்’ என்னும் புதிய பட நிறுவனம் ‘ஆலமரம்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.என்.துரைசிங் இயக்குகிறார். இப்படத்திற்கு உதய சங்கர் ஒளிப்பதிவு செய்ய, ராம் ஜீவன் இசை அமைக்கிறார். இப்படம் தேனி, மதுரை ஆகிய ஊர்களின் இயற்கை அழகு கொஞ்சும் இடங்களில் படமாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;