துப்பறியும் அஜித்!

துப்பறியும் அஜித்!

செய்திகள் 6-Jun-2014 2:54 PM IST VRC கருத்துக்கள்

அஜித், கௌதம் மேனன் இணைந்துள்ள படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஏரியாவில் தான் அஜித்தின் வீடும் இருக்கிறது. இதனால், அஜித்தின் வசதிக்காக தான் கௌதம் மேனன் அங்கு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார் என்று சிலர் கூறி வருகிறார்களாம்! ஆனால் அது இல்லையாம்! மாறாக படத்தின் கதைபடி ஈ.சி.ஆர். ரோட்டில் ஒரு குற்றம் நடக்கிறதாம்! அதை கண்டு பிடிக்கும் அதிகாரியாக அங்கு வருகிறார் அஜித். இப்படத்தில் ஈ.சி.ஆர்.ரோடு பகுதி காட்சிகள் முக்கிய அங்கம் வகிப்பதால் தானாம் அங்கு இந்த தொடர் படப்பிடிப்பு! இப்படத்தில் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் அஜித்தின் மற்ற கேரக்டர் என்ன என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் கௌதம் மேனன், அது பற்றிய விவரங்களை விரைவில் அறிவிப்பார் என்ற ஆவலுடன் இருக்கிறார்கள் தல ரசிகர்கள்! இந்த இரண்டு கேரக்டர்களில் ஒரு கேரக்டருக்கு அனுஷ்காவும் இன்னொரு கேரக்டருக்கு த்ரிஷாவும் ஜோடியாக நடிக்கிறார்கள். இதில் அனுஷ்காவுக்கு மிக முக்கியமான கேரக்டர் என்றும், அந்த கேரக்டருக்கு அனுஷ்காவையே டப்பிங் பேசவும் சொல்லியிருக்கிறாராம் கௌதம் மேனன்! ஆக, அனுஷ்கா தமிழில் டப்பிங் பேசும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;