விஸ்வரூபம், ஆரம்பம் படங்களை தொடர்ந்து ‘லிங்கா’விலும்!

விஸ்வரூபம், ஆரம்பம் படங்களை தொடர்ந்து ‘லிங்கா’விலும்!

செய்திகள் 6-Jun-2014 12:55 PM IST VRC கருத்துக்கள்

‘கோச்சடையான்’ படத்தின் மூலம் இந்தியாவின் முதல் மோஷன் கேப்ட்சரிங் டெக்னாலஜி படத்தில் நடித்த பெருமை ரஜினிக்குக் கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி நடித்து வரும் ‘லிங்கா’ படத்திலும் ஒரு புது விஷயம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதாவது, இந்தப் படத்தில் இதுவரை இந்தியாவில் எந்தப் படத்திற்காகவும் பயன்படுத்தப்படாத Phantom flex 4k hight speed camera பயன்படுத்தப்படுகிறது. ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரத்தினவேலு தான் ‘லிங்கா’ படத்திற்கும் ஒளிப்பதிவாளர்! கமலின் ‘விஸ்வரூபம்’, அஜித்தின் ‘ஆரம்பம்’ படங்களில் சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்த லீ விட்டேகர், ரஜினியின் ‘லிங்கா’விலும் சண்டை பயிற்சியாளராக பணிபுரிகிறார். சமீபத்தில் இவர் அமைத்த சண்டைக்காட்சி ஒன்றில் ரஜினி நடிக்க, அந்த காட்சியை ஸ்டீரியோவிஷன் முறையில் இந்த நவீன கேமரா மூலம் தான் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. ‘லிங்கா’வில் இந்த அதிநவீன கேமராவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;