ஸ்ருதிஹாசனின் புதிய அவதாரம்!

ஸ்ருதிஹாசனின் புதிய அவதாரம்!

செய்திகள் 6-Jun-2014 12:17 PM IST Top 10 கருத்துக்கள்

தெலுங்கு சினிமாவின் பிரின்ஸ் மகேஷ் பாபு நடித்து வரும் படம் ’ஆகடு’. பல ஹிட் படங்களை இயக்கிய சீனு வைட்லா இயக்கும் இப்படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். சமீபகாலமாக மகேஷ் பாபு நடித்த பெரும்பாலான படங்களிலும் ஒரு ஐட்டம் டான்ஸ் இடம் பெறுவதும், அதில் பிரபலமான நடிகைகளை ஆட வைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் மகேஷ் பாபு நடித்த ’பிசினஸ்மேன்’ படத்தில் ஸ்வேதா பரத்வாஜ் நடனம் ஆடியிருந்தார். ’துகுடு’ படத்தில் பார்வதி மில்டன் குத்தாட்டம் போட்டிருந்தார். இப்போது அந்த வரிசையில் ‘ஆகடு’ படத்தில் இடம் பெறும் ஐட்டம் டான்ஸில் ஸ்ருதி ஹாசன் நடனம் ஆட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்போது தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாகியுள்ள ஸ்ருதி ஹாசனின் இந்த புதிய அவதாரம் குறித்து தான் டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் பரபரப்பு பேச்சு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;