செல்வராகவனின் பிறந்த நாள் சர்ப்ரைஸ்!

செல்வராகவனின் பிறந்த நாள் சர்பரைஸ்!

செய்திகள் 6-Jun-2014 3:26 PM IST VRC கருத்துக்கள்

கார்த்தி, ரீமாசென், ஆன்ட்ரியா, பார்த்திபன் ஆகியோர் முக்கிய கேர்கடர்களில் நடித்து, செல்வராகவன் இயக்கிய படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. வித்தியாசமான கதை அமைப்பில், பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் 2010-ல் வெளியாகி வெற்றிப் பெற்றது. இப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக இன்று தனது பிறந்த நாளையொட்டி அறிவித்துள்ளார் செல்வராகவன்! ஆனால் அடுத்த ஆண்டில் தான் இதன் வேலைகள் துவங்குமாம்! சமீபத்தில் செல்வராகவன் இயக்கிய ‘இரண்டாம் உலகம்’ அவரை ஏமாற்றி விட்டது. இதனால் அடுத்து ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருப்பதால் இப்போது அதற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறாராம்! ‘ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2’ படத்தின் அறிவிப்போடு, இன்று பிறந்த நாள் காணும் செல்வராகவனுக்கு ‘டாப் 10 சினிமா’வின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;