பாவனாவுக்கு இன்று பிறந்தநாள்!

பாவனாவுக்கு இன்று பிறந்தநாள்!

செய்திகள் 6-Jun-2014 10:48 AM IST VRC கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாவனா. இந்தப் படத்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி, மாதவன், அஜித் உட்பட பல ஹீரோக்களுடன் ஹீரோயினாக இணைந்து நடித்த பாவனா, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு நட்சத்திரமாக பிரகாசித்து வருபவர். சமீபகாலமாக அவரை தமிழ் சினிமாவில் அதிகமாக பார்க்க முடியவில்லையென்றாலும், மற்ற மொழிப் படங்களில் அவர் இன்று ஒரு பிசியான நடிகை! தமிழை பொறுத்தவரை ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்றாலும் அப்படங்களில் நமது நினைவில் நிற்பது மாதிரியான நடிப்பை அவர் வழங்கியிருந்தார். இன்று பவனாவுக்கு பிறந்த நாள்! இந்த இனிய நாளில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;