அஜித் 55, ‘கத்தி’க்கு முன்பா பின்பா?

அஜித் 55, ‘கத்தி’க்கு முன்பா பின்பா?

செய்திகள் 5-Jun-2014 4:58 PM IST VRC கருத்துக்கள்

அஜித், கௌதம் மேனன் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது அல்லவா! இந்தப் படத்தை சீக்கிரம் முடித்துவிட்டு, ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருக்கிறாராம் இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரதனம்.முதலில் இப்படம் அடுத்த வருடம், அதாவது 2015-ல் தான் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்படத்தை நவம்பர் மாதமே வெளியிடும் வகையில் படப்பிடிப்பை துரிதப்படுத்த சொல்லியுள்ளாராம் ஏ.எம்.ரத்னம். அஜித் நடித்த ‘வீரம்’ கடந்த பொங்கல் அன்று வெளியானது. அதை தொடர்ந்து இப்போது அஜித் நடிக்கும் இப்படத்தை அடுத்த வருட வெளியீடாக கொண்டு வருமானால் ஒரு பெரிய கேப் ஏற்படும் என்ற காரணத்தினால் இப்படத்தை சீக்கிரம் முடித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளனராம் தயாரிப்பு தரப்பினர். இதனால் தானாம் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை கூட தள்ளி வைத்திருக்கிறார்க்ள் என்று கூறப்படுகிறது.

சாதாரணமாக கௌதம் மேனன் இயக்கும் படம் என்றாலே கொஞ்ச கால அவகாசம் எடுப்பது வழக்கம்! கௌதம் மேனன் இயக்கத்திலும் படம் வெளிவந்து வெகு நாட்களாகி விட்டதால் அவருக்கும் உடனடியாக ஒரு ரிலீஸ் தேவைப்படுவதால் தானாம் இந்த வேகம்! விஜய், முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ’கத்தி’ படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் மாதம் வெளிவரவிருக்கிறது என்று கூறப்படுகிறது. அதனால் ‘கத்தி’க்கு பிறகு தான் அஜித் படம் வெளியாகும் என தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;