நடிப்பது கஷ்டம் - ‘ஜெயம்’ ராஜா

நடிப்பது கஷ்டம் -  ‘ஜெயம்’ ராஜா

செய்திகள் 5-Jun-2014 12:27 PM IST Inian கருத்துக்கள்

பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா. அவரை எப்படியும் நடிக்க வைத்துவிட வேண்டும் என பல இயக்குனர்கள் போட்டி போட்டு வந்தனர். தன்னை நடிக்க கேட்ட அத்தனை பேருக்கும் ராஜா சொன்ன ஒரே பதில் ‘நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை’ என்பதுதான். அதில் அவர் பிடிவாதமாகவும் இருந்து வந்தார். ஆனால் அவரின் பிடிவாதத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் இணை இயக்குனர் குரு ரமேஷ் முறியடித்துள்ளார்.

குரு ரமேஷ் இயக்கிவரும் படம் ‘என்ன சத்தம் இந்த நேரம்’. ஒரே பிரசவத்தில் பிறந்த 4- குழந்தைகளை மைய்யமாகக் கொண்ட கதை. படத்தின் ஹீரோவே இந்தக் குழந்தைகள் தான். இந்தப் படத்தில் ‘ஜெயம்’ ராஜா அந்த குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மாளவிகா வேல்ஸ் நடித்திருக்க, நிதின் சத்யா, ‘காதல் மன்னன்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த மானு ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் மரகதமணியின் தம்பி நாகா இசை அமைத்துள்ளார்.

முதன் முதலாக தனது நடிப்பு அனுபவம் பற்றி ‘ஜெயம்’ ராஜா கூறும்போது, ‘‘நடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த என்னை நடிக்க தூண்டியது இந்தப் படத்தின் கதையம்சமும், அந்த 4 குழந்தைகளும் தான். இந்தப் படம் எனக்கு மறக்க முடியாத ஒரு சந்தோஷ அனுபவம். பல படங்கள் இயக்கியிருந்தாலும் நடிப்புக்கு நான் புதிது. ஆகையால் நான் இயக்குனர் குரு ரமேஷிடம், ‘எனக்கு நடிக்கத் தெரியாது, நீங்கள் தான் பார்த்துக் கொள்ளவேண்டும்’ என்று சொல்லி விட்டேன். நடிக்கும்போதுதான் தெரிகிறது நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று! நானும் நிறைய நடிகர்களை கஷ்டப்படுத்தியே நடிப்பை வாங்கியுள்ளேன். இப்போது நான் இயக்கும் ‘தனி ஒருவன்’ படத்தில் ‘ஜெயம்’ ரவியும், நயன்தாராவும் நடிக்கிறார்கள். நான் முன் இயக்கிய படங்களில் நடிகர்களிடம் வேலை வாங்கிய மாதிரி இந்தப் படத்தில் வேலை வாங்கவில்லை. கொஞ்சம் சாஃப்டா தான் வேலை வாங்குகிறேன். காரணம் நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நான் நடித்த பிறகுதான் உணர்ந்தேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பண்டிகை - டிரைலர்


;