பாலிவுட்டில் டைரக்டராகும் ‘யான்’ பட இயக்குனர்!

பாலிவுட்டில் டைரக்டராகும் ‘யான்’ பட இயக்குனர்!

செய்திகள் 5-Jun-2014 11:00 AM IST Chandru கருத்துக்கள்

இந்திய சினிமா உலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் ரவி கே.சந்திரன் ‘யான்’ படத்தின் மூலம் தமிழில் தனது இயக்குனர் கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பாடல்களும் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் பாலிவுட் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு ரவி கே.சந்திரனுக்கு வந்திருக்கிறது. ‘மை நேம் இஸ் கான்’, ‘பிளாக்’, ‘தில் சாத்தா ஹை’ போன்ற பாலிவுட் படங்களுக்கு ஏற்கெனவே ஒளிப்பதிவாளராக அவர் பணிபுரிந்திருந்தாலும் ஹிந்தி படம் இயக்கவிருப்பது இதுதான் முதல் முறை.

2010ல் பிரெஞ்ச் மொழியில் வெளிவந்த ‘பாயின்ட் பிளாக்’ எனும் படத்தின் ஹிந்தி ரீமேக்கைதான் இயக்கவிருக்கிறார் ரவி கே.சந்திரன். சென்டிமென்ட் ஆக்ஷன் கலந்த இப்படத்தின் திரைக்கதையை இந்தியாவிற்குத் தகுந்தபடி மாற்றிக் கொண்டிருப்பதில் தற்போது பிஸியாக இருப்பதால், அனேகமாக இப்படம் 2015ல் படப்பிடிப்பிற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தின் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்தை தமிழுக்கு ஏற்றவாறும் மாற்றி தமிழிலும் இயக்கும் திட்டம் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;