‘ஜூன் 19’ முதல் சன்னியின் ‘வடகறி’ விருந்து!

‘ஜூன் 19’ முதல் சன்னியின் ‘வடகறி’ விருந்து!

செய்திகள் 5-Jun-2014 10:38 AM IST Top 10 கருத்துக்கள்

ஜெய், ஸ்வாதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வடகறி’. இப்படத்தை வெங்கட்பிரபுவின் உதவியாளர் சரவணராஜன் இயக்கியுள்ளார். ரொமான்டிக் காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஹைலைட்டான விஷயம் சன்னிலியோன். ஹிந்திப் படங்களில் கவர்ச்சி புயலாக வீசிவரும் இவர் தற்போது ‘வடகறி’ படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இப்படத்தில் சன்னி லியோன் நடித்திருப்பதையொட்டி இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அண்மையில் சென்சாருக்கு சென்ற இப்படத்திற்கு ‘யு’ சர்டிஃபிகேட் கொடுத்துள்ளனர். எனவே சன்னி லியோனின் தாராள கவர்ச்சி இப்படத்தில் இருக்குமா என்பது சந்தேகமே!. மீகா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஜூன் 19-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;