தமிழ் கற்கும் தீபா சன்னிதி!

தமிழ் கற்கும் தீபா சன்னிதி!

செய்திகள் 5-Jun-2014 10:34 AM IST VRC கருத்துக்கள்

சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் ‘லுசியா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தீபா சன்னதி! சான்டல்வுட் ஹீரோயினான இவர் இப்படத்தின் மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமாகிறார். ‘லுசியா’வின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. அதற்குள்ளாகவே தீபாவுக்கு விஷ்ணுவர்த்தன் இயக்கும் ’யட்சன்’ படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து, தற்போது அந்தப் படத்திலும் நடித்து வருகிறார். கன்னடம் தாய் மொழியாக கொண்ட தீபாவுக்கு அவ்வளவாக தமிழ் தெரியாதாம். ‘லுசியா’ மற்றும் ’யட்சன்’ படங்களின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருவதால், தமிழை கற்றுக்கொள்வதிலும் தீபா தற்போது மும்முரமாக இருந்து வருகிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;