உருவாகிறது அனிருத்தின் அடுத்த ‘கொலவெறி’!

உருவாகிறது அனிருத்தின் அடுத்த ‘கொலவெறி’!

செய்திகள் 5-Jun-2014 10:21 AM IST Chandru கருத்துக்கள்

‘கொலவெறி’ பாடல் ‘3’ படத்திற்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் அது தனி இசை ஆல்பமாக உலகமெங்கும் மெஹா ஹிட் அடித்தது. அந்தப் பாடல் தந்த வெற்றியே ‘எதிர்நீச்சல்’, ‘டேவிட்’, ‘வணக்கம் சென்னை’, ‘இரண்டாம் உலகம்’, ‘மான் கராத்தே’, ‘வேலையில்லா பட்டதாரி’ என வரிசையாக அவர் கொடுத்த வெற்றிக்கு அடிக்கல்லாக அமைந்தது. தற்போது விஜய்யின் ‘கத்தி’, சிவகார்த்திகேயனின் ‘டாணா’ ஆகிய படங்களோடு ‘ஆக்கோ’ எனும் படத்திற்கும் இசையமைத்துக் கொண்டிருக்கிறார் அனிருத்.

ஒருபுறம் படங்களுக்கு பிஸியாக பணிபுரிந்து கொண்டிருந்தாலும் இன்னொருபுறம் இசை ஆல்பங்களை தயாரிக்கும் பணியிலும் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார் அனிருத். தற்போது முழுக்க முழுக்க சென்னையைப் பற்றி ‘சான்ஸேயில்ல...’ என்ற ஆல்பம் ஒன்றிற்கு இசையமைத்து ஆடவிருக்கிறார் அனிருத். சிம்புவின் ‘போடா போடி’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இந்த ஆல்பத்தை இயக்க, நடனம் அமைக்கிறார் ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ படங்களுக்கு தற்போது நடன இயக்குனராகப் பணிபுரியும் சதீஷ். ‘ராஜா ராணி’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் இன்று முதல் இந்த ஆலபத்திற்கான ஷூட்டிங் நடைபெறுகிறது.

அனிருத்தின் இசை மற்றும் நடனத்தில் உருவாகிவரும் இந்த ‘சான்ஸேயில்ல....’ ஆல்பம் இன்னொரு ‘கொலவெறி’யாக மாறி உலகமெங்கும் ஹிட்டாக வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;