‘பாலா’வுக்காக சமஸ்கிருதம் கற்ற விவேக்!

‘பாலா’வுக்காக சமஸ்கிருதம் கற்ற விவேக்!

செய்திகள் 5-Jun-2014 10:04 AM IST Inian கருத்துக்கள்

25 வருடங்களாக நகைச்சுவையில் முத்திரை பத்தித்து வருபவர் பத்மஸ்ரீ விவேக். இயக்குனர் பாலாவின் உதவியாளர் கண்ணன் இயக்கியுள்ள ‘நான்தான் பாலா’ படத்தின் மூலம் கதாநாயகனாகி இருக்கிறார் விவேக். வருகிற 13-ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படம் பற்றி விவேக் கூறியதாவது:

‘’ஹீரோவாக நடிக்க பல வாய்ப்புக்கள் வந்தாலும் மனதுக்கு பிடித்தது மாதிரி எதுவும் அமையவில்லை. இயக்குனர் பாலாவின் உதவியாளர் கண்ணன் ஒரு கதை சொன்னார். அழுத்தமான கதை. என்னை வெகுவாக கவர்ந்தது. அந்த கதைதான் இந்த ‘நான்தான் பாலா’.
பாலா, ஒரு நேர்மையான ஏழை பிராமணன். கும்பகோணத்தில் உள்ள ஒரு பெருமாள் கோவில் பூசாரி. வயதான தாய், தந்தைக்கு சேவை செய்து வருகிறவன். காஞ்சியில் போளி விற்கும் ஒரு பெண்ணிற்கும் பாலாவிற்கும் காதல் ஏற்படுகிறது. அடி தடிக்கு அஞ்சாத ஒரு ரௌடி இவர்களின் திருமணத்தை நடத்த முன் வருகிறான். ரௌடி தலைமையில் நடக்கவிருக்கும் திருமணத்தை பாலா விரும்பவில்லை. அதன் பிறகு பாலாவின் வாழ்வில் நடந்தது என்ன என்பதை நெகிழ்ச்சியான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கண்ணன்.

சீரியஸான கதையா இருந்தாலும் கமெடியும் உண்டு. செல்முருகன், மயில்சாமி இருவரும் காமெடியில் கலக்கி உள்ளனர். செல்முருகன் திறமைக்கு தனியாகவே காமெடி பண்ணலாம் அவர் தான் என்னை விட்டு போகமாட்டேன் என்கிறார். முதன் முதலாக இப்படத்தில் சௌராஷ்டிரா சமூகத்தையும் ,மொழியையும் தமிழ்த் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். கதாநாயகி ஸ்வேதா சௌராஷ்டிரா குடும்பப் பெண்ணாக நடித்துள்ளார்.
நான், பெருமாள் கோவில் பூசாரியாக நடிப்பதால் வேலுக்குடி கிருஷ்ணய்யர் என்கிற சமஸ்கிருத பண்டிதரிடம் சமஸ்கிருத ஸ்லோகங்களை முறையாக கற்றேன். தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் இளைய இயக்குனர்களில் ஒருவராக இப்படத்தின் இயக்குனர் கண்ணன் இருப்பார்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;