தனி ஒருவனாக ‘ஜெயம்’ ரவி!

தனி ஒருவனாக ‘ஜெயம்’ ரவி!

செய்திகள் 4-Jun-2014 5:33 PM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ராஜா - ‘ஜெயம்’ ரவி கூட்டணியில் கடைசியாக வெளிவந்த படம் ‘தில்லாலங்கடி’. இந்த படத்திற்கு பிறகு மீண்டும் ‘ஜெயம்’ ராஜாவும், ‘ஜெயம்’ ரவியும் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆர்மபமானது. இப்படத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் முதன் முதலாக நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கிறார். இப்படத்தில் ஜெயம் ரவி இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான ஒரு கேரக்டரில் நடிக்க, நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு துவங்கிய இப்படத்திற்கு இப்போது ‘தனி ஒருவன்’ என்று பெயர் வைத்துள்ளனர். ஜெயம் ரவி நடித்துள்ள ’பூலோகம்’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்க, ‘ரோமியோ ஜூலியட்’ என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - டீசர்


;