ஜூன் 27-ல் சைவம்!

ஜூன் 27-ல்  சைவம்!

செய்திகள் 4-Jun-2014 11:59 AM IST VRC கருத்துக்கள்

வித்தியாசமான நல்ல படங்களை தேடிப் பிடித்து வாங்கி வெளியிடும் நிறுவனம் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘மதராசபட்டணம்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘மைனா’ உட்பட இந்நிறுவனம் வெளியிட்ட படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்தது. அந்த வரிசையில் தற்போது விஜய் இயக்கி, தயாரித்துள்ள ‘சைவம்’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் பெற்றுள்ள இந்நிறுவனம் இப்படத்தை வருகிற 27-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் குழந்தை நட்சத்திரம் சாராவும், நாசரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன் நாசரின் இளைய மகன் பாஷாவும் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். தாத்தாவுக்கும் பேத்திக்குமான பாசப்போராட்டமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சரவணன் இருக்க பயமேன் - எம்புட்டு இருக்குது ஆசை வீடியோ சாங்


;