ஹேப்பி பர்த்டே ப்ரியாமணி!

ஹேப்பி பர்த்டே ப்ரியாமணி!

செய்திகள் 4-Jun-2014 10:44 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இயக்குனர் பாராதிராஜா அறிமுகப்படுத்தும் நடிகர், நடிகைகள் பிரகாசிக்காமல் போகாது என்று கூறுவார்கள்! அந்த வரிசையில் பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பிரகாசித்து வருபவர் ப்ரியாமணி! இந்தப் படம் சொல்லும்படியான வெற்றியை பெறவில்லையென்றாலும், ப்ரியாமணி சிறந்த நடிகை என்பதை இப்படம் அடையாளம் காட்டியது! இந்தப் படத்தை தொடர்ந்து அவர் நடித்த படங்களில் ‘பருத்திவீர்ன்’ என்ற படமும், அதில் அவர் ஏற்று நடித்த முத்தழகு என்ற கேரக்டரும் போதும் ப்ரியாமணியின் நடிப்புத் திறமையை எடுத்துச் சொல்ல! இப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக இந்தியாவின் தேசிய விருது உட்பட பல விருதுகள் இவருக்கு கிடைத்தது! தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வரும் ப்ரியாமணிக்கு இன்று பிறந்த நாள்! ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் வாழ்த்துக்களுட்ன் இன்று பிறந்த நாள் காணும் ப்ரியாமணிக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை எக்ஸ்பிரஸ் சிறப்பு வீடியோ


;