ருசிக்குமா பிரகாஷ் ராஜின் சமையல்?

ருசிக்குமா பிரகாஷ் ராஜின் சமையல்?

செய்திகள் 4-Jun-2014 10:53 AM IST Chandru கருத்துக்கள்

நடிகராக கன்னடா சினிமாவில் அறிமுகமான பிரகாஷ் ராஜ், தமிழில் அறிமுகமானது ‘டூயட்’ படத்தின் மூலம். அதன் பிறகு தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ‘டூயட் மூவிஸ்’ என்ற பெயரில் படங்களையும் தயாரித்து வழங்கினார். இவருடைய தயாரிப்பில் ‘அழகிய தீயே’, ‘கண்ட நாள் முதல்’, ‘அபியும் நானும்’, ‘வெள்ளித்திரை’, ‘பயணம்’ ஆகிய படங்கள் குறிப்பிடத் தகுந்தவை. நடிப்பு, தயாரிப்பு என களம் கண்டவர் அடுத்ததாக தனது இயக்குனர் ஆசை¬யும் ‘நானு நன்னா கனசு’ கன்னடப் படத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டார். தமிழிலும், தெலுங்கிலும் பிரகாஷ் ராஜ் இயக்கிய ‘தோனி’ படம் ஒரே நேரத்தில் வெளிவந்து நல்ல விமர்சனத்தைப் பெற்றது.

தற்போது நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என ஒரே நேரத்தில் மூன்று குதிரைகளிலும் சவாரி செய்வதில் வல்லவராகிவிட்டார் பிரகாஷ் ராஜ். மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘சால்ட் அன்ட் பெப்பர்’ படத்தின் உரிமையை வாங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரீமேக்கியிருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை தமிழில் ‘உன் சமையலறையில்’ என்ற பெயரில் ‘சால்ட் அன்ட் பெப்பர்’ படத்தின் ரீமேக் வெளியாகிறது. படத்தின் பாடல்களுக்கும், டிரைலருக்கும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படமும் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். பிரகாஷ் ராஜுடன் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார் சினேகா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;