கின்னஸ் சாதனையாளருக்கு இன்று பிறந்த நாள்!

கின்னஸ் சாதனையாளருக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 4-Jun-2014 10:09 AM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான பின்னணிப் பாடகர் மட்டுமல்லாமல், இசை அமைப்பாளர், நடிகர், பின்னணி குரல் கொடுப்பவர், திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்களோடு விளங்கி வருபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். எண்ணிக்கையில் அதிகமான பாடல்களை பாடியமைக்காக கின்னஸ் சாதனை கூட படைத்துள்ள இந்த மாபெரும் கலைஞனுக்கு இந்தியாவின் பத்மஸ்ரீ விருது, சிறந்த பாடகருக்கான தேசிய விருது, ஆந்திர மாநில நந்தி விருது உட்பட ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளது. சினிமாவை பொறுத்தவரையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்காக பாடல்களை பாடியுள்ளார் எஸ்.பி.பி. இந்த சாதனைக்கு காரணம் அவருக்கு ஆண்டவன் அளித்துள்ள இனிய குரல்வளம் தான்! கிட்டத்தட்ட 45 ஆண்டுக் காலமாக இந்திய சினிமாவில் கோலோச்சி வரும் இந்த மாபெரும் இசை கலைஞன் பிறந்த நாள் இன்று! இந்த இனிய நாளில் அவருக்கு வாழ்த்துக்களைச் சொல்வதில் ‘டாப் 10 சினிமா’ பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2 . 0 டீஸர்


;