மீண்டும் ‘பயமுறுத்த வரும்’ கூட்டணி!

மீண்டும் ‘பயமுறுத்த வரும்’ கூட்டணி!

செய்திகள் 4-Jun-2014 10:01 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த மாதம் வெளியாகி 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘யாமிருக்க பயமே’ திரைப்படம். கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் இப்படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனர் டி கே. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இயக்குனர் / தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தை தயாரித்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பெரிய லாபம் தந்திருக்கும் ‘யாமிருக்க பயமே’ படத்தின் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறது. அதாவது ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் டி கே. இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிக, நடிகையார், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஏற்கெனவே ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான ‘முனி’ படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக ‘காஞ்சனா’ வெளிவந்தது. அதுவும் வெற்றி பெறவே தற்போது ‘முனி’யின் மூன்றாம் பாகமாக ‘கங்கா’ படத்தை எடுத்து வருகிறார். ஹாரர் படங்களைப் பொறுத்தவரை முதல் பாகம் வெற்றியடைந்தால் அதன் இரண்டாம் பாகமும் வெளிவருவது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். இதனால் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் & டி கே மீண்டும் இணையவிருக்கும் படம் ‘யாமிருக்க பயமே’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவலை வேண்டாம் - டீசர் 2


;