ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் நடிக்கும் தோட்டா தரணி!

ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் நடிக்கும் தோட்டா தரணி!

செய்திகள் 3-Jun-2014 5:54 PM IST VRC கருத்துக்கள்

'கல்யாண சமையல் சாதம்' படத்தை இயக்கிய ஆர்.எஸ்.பிரசன்னா, சாமி சின்மயானந்தாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக இயக்கி, தயாரிக்கிறார். ஆங்கிலத்தில் எடுக்கப்படும் இப்படத்திற்கு 'QUEST' என்று டைட்டில் வைத்திருக்கிறார். இதில் சாமி சின்மயானந்தா கேரக்டரில் பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி நடிக்கிறார். 90 நிமிடங்கள் ஓடக் கூடிய வகையில் எடுக்கப்படவிருக்கும் இப்படத்தில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவாளராக பணிபுரிய இருக்கிறார். அரோரா இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கவிருக்கிறது.

ஆர்.எஸ்.பிரசன்னா ஏற்கெனவே ஓளி ஓவியரும், இயக்குனருமான மறைந்த பாலுமகேந்திரா பற்றி 90 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு டாகுமென்டரியை தயாரித்துள்ளார். இதில் இளையராஜா, கமல்ஹாசன், ரேவதி உட்பட பல திரையுலக பிரபலங்கள் பாலு மகேந்திரா பற்றி பேசியிருக்கிறார்கள்! இந்த படம் விரைவில் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;