ரசிக்க வைக்கும் ‘மஞ்சப்பை’ ராஜ்கிரண்!

ரசிக்க வைக்கும் ‘மஞ்சப்பை’ ராஜ்கிரண்!

செய்திகள் 3-Jun-2014 4:46 PM IST Chandru கருத்துக்கள்

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் விமல், லக்ஷ்மிமேனன் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கும் ‘மஞ்சப்பை’ படம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் விமலுக்கு தாத்தாவாக வெள்ளந்தி கிராமத்து மனிதராக மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராஜ்கிரண். இதுவரை பல வேடங்களில் அவர் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் அவரின் கேரக்டர் மிகவும் பேசப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம். ஹீரோ, ஹீரோயினுக்கு இணையாக ராஜ்கிரணையும் முன்னிலைப்படுத்தியே விளம்பர போஸ்டர்களும், டீஸர், டிவி புரமோக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று வெளிவந்திருக்கும் இரண்டு டிவி புரமோக்களுக்கு ரசிகர்களிடமிருந்து பெரிய வரவேற்பு கிடைத்திருக்கின்றன.

அதில் ஒரு புரமோவில் ராஜ்கிரணும், லக்ஷ்மிமேனனும் சென்னை மெரினா பீச்சில் அலைகளை ரசித்துக் கொண்டிருக்க, அப்போது அங்கே வரும் போலீஸ்காரர்கள் ‘‘நேத்துதான் ஒருத்தன் செத்துருக்கான்... போங்க போங்க’’ என விரட்டியடிக்க, துப்பாட்டாவால் மூடி முத்தம் கொடுத்தபடி பீச்சில் உட்கார்ந்திருக்கும் ஒரு ஜோடியைப் பார்க்கும் ராஜ்கிரண், ‘‘இங்க பாரு ஆத்தா.... நேத்து செத்ததுக்கு இன்னமும் பாவம் கூடி உட்கார்ந்து அழுதுகிட்டிருக்குகளே...’’ என அப்பாவியாக கூறியபடி அவர்களை ஆறுதல் படுத்த துப்பட்டாவை விலக்குவதுபோல் உருவாக்கியிருக்கிறார்கள். காமெடியான காட்சியைக் கொண்ட இந்த புரமோவிற்கு தற்போது பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.இதைப்போல இன்னொரு 10 வினாடி கொண்ட புரமோவில் லக்ஷிமேனனைப் பார்த்து ராஜ்கிரண், ‘‘கொடுக்குறதுல கர்ணனுக்கும் தர்மனுக்கும் தம்பி என் பேரப்புள்ள’’ என விமலைப் பார்த்துச் சொல்ல, விமல் தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டதை கோபத்துடன் நினைத்துப் பார்க்கிறார் லக்ஷ்மிமேனன். இப்படி ‘மஞ்சப்பை’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒண்ணும் தெரியாத அப்பாவி மனிதராக ராஜ்கிரண் ரசிகர்களின் மனதை அள்ளுவாராம். படம் வெளிவந்ததும் ராஜ்கிரணின் இந்த கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஞ்சுமிட்டாய் - டிரைலர்


;