’கத்தி’க்கு பிரேக்… ‘ஹாலிடே’வில் ஏ.ஆர்.முருகதாஸ்!

’கத்தி’க்கு பிரேக்… ‘ஹாலிடே’வில் ஏ.ஆர்.முருகதாஸ்!

செய்திகள் 3-Jun-2014 3:57 PM IST VRC கருத்துக்கள்

‘துப்பாக்கி’யைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார் ஏ.அர்.முருகதாஸ். இவர், ‘துப்பாக்கி’ படத்தை அக்‌ஷய் குமார் நடிப்பில், ‘ஹாலிடே’ என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்கியிருக்கிறார். இந்தப் படம் வருகிற 6-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதை முன்னிட்டு இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மும்பை சென்றுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்! இதனால் ‘கத்தி’ படத்தின் ஷூட்டிங்குக்கு ஒரு சிறிய பிரேக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் ‘ஹாலிடே’ படத்தின் புரமோஷனுக்காக மும்பை சென்றிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ‘கத்தி’ பட ஹீரோ விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;