சந்தானம், கிருஷ்ணா இணைந்து கொடுத்த ஹிட்!

சந்தானம், கிருஷ்ணா இணைந்து கொடுத்த ஹிட்!

செய்திகள் 3-Jun-2014 1:12 PM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ரிலீஸாகும் நாலைந்து படங்களில் ஏதாவது ஒரு படம் வெற்றி பெற்றாலே இன்றைய சூழ்நிலையில் அது பெரிய விஷயம். ஆனால், இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளிவந்த சந்தானத்தின் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படமும், கிருஷ்ணாவின் ‘யாமிருக்க பயமே’ படமும் ஒரே நேரத்தில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. மே 9ஆம் தேதி வெளியாகவிருந்த ‘கோச்சடையான்’ படம் தள்ளிப்போனதை அடுத்து திடீர் ரிலீஸாக 9ஆம் தேதி ‘யாமிருக்க பயமே’ படமும், மே 10ஆம் தேதி ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் வெளியாகி தற்போது இரண்டு படங்களுமே 25 நாட்களை எட்டியுள்ளன.

கிருஷ்ணா, ஓவியா, ரூபா மஞ்சரி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் ஹாரர் கலந்த காமெடிப் படமாக வெளிவந்த ‘யாமிருக்க பயமே’ படத்திற்கு ‘ரிப்பீட்’ ஆடியன்ஸ் வருவதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகிறார்கள். அதேபோல், முதல் வாரத்தைவிட இரண்டாவது வாரத்திலிருந்து திரையரங்குகளின் எண்ணிக்கையும், காட்சிகளையும் அதிகப்படுத்தினார்கள்.

‘மரியாதை ராமண்ணா’வின் தமிழ் ரீமேக்காக வெளிவந்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் சந்தானத்தின் வழக்கமான காமெடி மற்றும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக வெளிவந்திருப்பதால் கோடைவிடுமுறையில் குழந்தைகளுடன் இப்படத்தைப் பார்க்க தியேட்டர்களுக்கு மக்கள் கூட்டம் வந்தது. கடந்த மே 23ஆம் தேதி ‘கோச்சடையான்’ படம் பிரம்மாண்டமாக வெளியானபோதும் கூட இந்த இரண்டு படங்களுக்கும் குறிப்பிட்ட அளவில் காட்சிகள் ஒதுங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சந்தானமும், கிருஷ்ணாவும் இணைந்து கொடுத்துள்ள இந்த வெற்றியால், படத்தை வாங்கியவர்களும், வெளியிட்டவர்களும், தியேட்டரில் ரிலீஸ் செய்தவர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;