இறுதிகட்டத்தில் யான்!

இறுதிகட்டத்தில் யான்!

செய்திகள் 3-Jun-2014 12:44 PM IST VRC கருத்துக்கள்

பிரபல ஒளிப்பதிவாளரான ரவி கே.சந்திரன், இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கி வரும் படம் ‘யான்’. ஜீவா, துளசி நாயர் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை ‘ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட்’ நிறுவனம் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து வருகிறது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. சமீபத்தில் இப்படத்திற்காக ‘ஆத்தங்கரை…’ என்று துவங்கும் ‘கானா’ பாலா பாடிய, கானா பாடல் ஒன்றை படமாக்கியிருக்கிறார்கள்! ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பில் அமைந்துள்ள இப்பாடலுக்கு ஜீவா ரொம்பவும் கஷ்டமான டான்ஸ் மூவ்மென்ட்ஸ் வைத்து ஆடியிருக்கிறாராம். இந்த பாடல் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்கிறார் ஜீவா! இன்னும் இரண்டு பாடல்கள் மற்றும் ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தால் இப்படம் முடிந்து விடுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - புதிய டிரைலர்


;