போலீஸ் அதிகாரியாகும் அரவிந்த் சாமி!

போலீஸ் அதிகாரியாகும் அரவிந்த் சாமி!

செய்திகள் 3-Jun-2014 12:08 PM IST Chandru கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் ‘ஹேன்ட்ஸம்’ ஹீரோக்கள் என யோசிக்கத் தொடங்கினால் ‘சட்டென்று’ மனதிற்குள் வந்துபோகிறவர்களில் அரவிந்த் சாமியும் ஒருவர். மணிரத்னம் இயக்கத்தில் ‘தளபதி’, ‘ரோஜா’, ‘பம்பாய்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிய அளவில் அப்போது பேசப்பட்டவர். அதன்பிறகு அவர் நடித்த படங்களில் ‘இந்திரா’வும், ‘மின்சார கனவு’, ‘புதையல்’, ‘சாகஸம்’ போன்ற படங்கள் மட்டுமே குறிப்பிடத்தகுந்த கவனத்தைப் பெற்றவை. 2006க்குப் பிறகு தமிழ் சினிமாவில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கியிருந்தவர் கடந்த வருடம் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘கடல்’ படத்தின் மூலம் மீண்டும் ‘ரீ&என்ட்ரி’ கொடுத்தார்.

இந்நிலையில் ‘புதையல்’ படத்தின் இயக்குனர் செல்வா, அரவிந்த் சாமியிடம் ஒரு கதை சொல்ல, அது அவருக்கு மிகவும் பிடித்துப்போகவே அந்தக் கதையில் நாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். இப்படத்தில் அரவிந்த் சாமி ‘ரஃப் அன்ட் டஃப்’ போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம். ஏற்கெனவே ஜிம்மிற்கு சென்று உடம்பை முறுக்கேற்றி வைத்திருப்பது போன்ற அரவிந்த் சாமியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியானபோது, ‘அது ஒரு படத்தில் வில்லனாக நடிப்பதற்காகத்தான்’ என்று செய்திகள் வெளியிட்டனர். ஆனால், அதை அப்போதே அரவிந்த் சாமி மறுத்துவிட்டார். எனவே, கூட்டிக்கழித்துப் பார்த்தால் அரவிந்த் சாமி உடம்பை ‘ட்ரிம்’ செய்து கொண்டிருப்பது செல்வா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காகத்தான் இருக்கும்போல் தெரிகிறது.

அனேகமாக ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். இதனால் விரைவில் யூனிஃபார்ம் போட்ட அரவிந்த் சாமியை ‘ஷூட்டிங் ஸ்பாட்’டில் எதிர்பார்க்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;