இன்று தமிழுக்கு பிறந்த நாள்!

இன்று தமிழுக்கு பிறந்த நாள்!

செய்திகள் 3-Jun-2014 11:50 AM IST Inian கருத்துக்கள்

முத்தமிழ் கலைஞர், மூத்த தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி. தமிழ்த் திரையுலகில் யாரும் எட்டிப் பிடித்துவிட முடியாத நிலையில் உயர்ந்து நிற்பவர்! தன்னுடைய 17 வயதில் இருந்து எழுத ஆரம்பித்தவர். பல சரித்திர சாதனைப் படங்களின் வெற்றிக்கு துணை நின்றவர். அவரின் வசன வாள்வீச்சுக்கு பல படங்கள் புகழ்பெற்றவை. 1947-ஆம் ஆண்டு முதன் முதலாக ‘ராஜகுமாரி’ படத்தின் மூலம் கதை, வசனம் எழுத ஆரம்பித்தவர், தொடர்ந்து ‘மனோகரா’, ‘பூம்புகார்’, ‘பராசக்தி’, ‘மந்திரிகுமாரி’ உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதினார். இந்தப் படங்களில் அவரது எழுத்துக்கள் முத்திரை பதித்தது.

எழுத்துலகில் ஐந்து தலைமுறைகளை வெற்றிகரமாக கடந்து வந்த அவரின் சமீபத்திய படைப்பு 2011-ல் வெளியான ‘பொன்னர் சங்கர்’ திரைப்படம். இப்படத்தில் பிரசாந்த் இரு வேடங்களில் நடித்திருந்தார். அண்ணமார் சாமி என்று கொங்கு மக்களால் அழைக்கப்படும் ‘பொன்னர் சங்கர்’ வாழ்க்கை கதை ஏற்கெனவே நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் புகழ்பெற்று திகழ்ந்து வருபவர். இன்று அவருடைய 91-வது பிறந்த நாள்! இன்றுவரையிலும் எழுதும் பழக்கத்தை கைவிடாத அவருக்கு ‘டாப் 10 சினிமா’ பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி, மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;