ரஜினி + ஷங்கர் = எந்திரன் 2

ரஜினி + ஷங்கர் = எந்திரன் 2

செய்திகள் 3-Jun-2014 11:30 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘எந்திரன் 2’. ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி ‘சிட்டி’ ரோபோவாகவும், ‘வசீகரன்’ என்ற சயின்டிஸ்ட்டாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த சூப்பர் பாடல்கள் அந்த வருடத்தின் ‘பிளாக்பஸ்டர்’ ஹிட். இப்படி ஒரு படத்தில் தங்கள் தலைவர் மீண்டும் நடிக்க மாட்டாரா என ஒவ்வொரு சூப்பர்ஸ்டார் ரசிகனும் இப்போது வரை ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஏக்கப் பெரூமூச்சு.... தற்போது உண்மையாகப் போகிறது. ஆம்.... மீண்டும் ஷங்கரும், ரஜினியும் இணைந்து ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கப் போகிறார்கள்!

தற்போது ‘ஐ’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். அதேபோல் கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் ‘லிங்கா’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. இந்த இரண்டு படங்களும் முடிந்தபிறகு இவர்கள் மீண்டும் இணைந்து, ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ‘எந்திரன் 2’ படத்தை உருவாக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கிடைத்துள்ளன. நீண்ட நாட்களாக இந்த செய்தி இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருந்தாலும், இப்போது நமக்குக் கிடைத்திருப்பது 90% உறுதிசெய்யப்பட்ட செய்தி! இதுவரை பேச்சுவார்த்தை அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்த ‘எந்திரன் 2’ புராஜெக்ட் தற்போது ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு நெருங்கியிருக்கிறதாம்.

‘எந்திரன்’ படத்தை கிட்டத்தட்ட 150 கோடி பட்ஜெட்டில் உருவாக்கியவர்கள், இப்போது இந்த இரண்டாம் பாகத்திற்காக அதைவிடவும் அதிகமாக 200 கோடிக்கும் மேல் செலவு செய்ய இருப்பதாகவும் கூறுகிறார்கள். பெரிய பட்ஜெட் என்பதால், அனேகமாக ஈராஸ் நிறுவனத்துடன் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் இணைந்து இப்படத்தை தயாரிக்குமாம். ரஜினிக்கும், ஷங்கருக்கும் ஹாலிவுட்டில் பெரிய வரவேற்பு இருப்பதால், கண்டிப்பாக போட்ட பணத்தைவிட பெரிய அளவில் வசூல் செய்துவிடலாம் என்பதே இதற்கு காரணமாம். அதேபோல், கிராபிக்ஸிலும், டெக்னிக்கல் விஷயங்களிலும் இப்படம் இந்திய சினிமாவிற்கே ஒரு முன்னோடிப் படமாகவும் அமையும் என்கிறார்கள்.

‘ஐ’ படத்தின் ரிலீஸிற்குப் பிறகு அனேகமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;