‘லிங்கா’வில் இணையும் ஹாலிவுட் பிரபலங்கள் !

‘லிங்கா’வில் இணையும் ஹாலிவுட் பிரபலங்கள் !

செய்திகள் 3-Jun-2014 10:39 AM IST Inian கருத்துக்கள்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’வின் படப்பிடிப்பு படு வேகம் பிடித்துள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோருடன் பிரட்டன் நடிகை லாரன் ஜெ.இர்வினும் நடிக்கிறார் என்ற தகவலை ஒரு சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். அத்துடன் இந்தப் படத்தில் ரஜினியுடன் மற்றுமொரு ஹாலிவுட் நடிகரும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் பெயர் வில்லியம் ஓரெண்ட்ராஃப். இந்தத் தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பது குறித்து பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ள வில்லியம், ‘லிங்கா’வில் ரஜினியுடன் நடிப்பதற்கான ஒப்பந்தத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே போடப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டுள்ளார். ‘லிங்கா’ படத்தில் 1940 காலகட்டம் சம்பந்தப்பட்ட நிறைய காட்சிகள் இடம் பெறுகிறது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் இருந்த அந்த காலகட்டத்தில் இடம் பெறும் காட்சிகளில் மேற்குறிப்பிட்ட ஹாலிவுட் கலைஞ்ரகள் இடம் பெறுகிறார்கள் போலும்! இப்படி பல புது விஷயங்களுடன் ‘லிங்கா’ படம் பெரும் எதிர்பார்ப்போடு உருவாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;