கோவாவில் ‘அஞ்சான்’ இறுதிகட்ட படப்பிடிப்பு!

கோவாவில் ‘அஞ்சான்’ இறுதிகட்ட படப்பிடிப்பு!

செய்திகள் 2-Jun-2014 2:19 PM IST VRC கருத்துக்கள்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பாடல் காட்சியை தவிர எல்லாம் முடிந்து விட்டது! இப்போது படத்தின் டப்பிங், எடிட்டிங் போன்ற போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் படு சுறுசுறுப்பாக நடந்து வர, மீதியுள்ள பாடல் காட்சியின் படப்பிடிப்புக்காக வருகிற 8-ஆம் தேதி கோவா கிளம்பவிருக்கின்றனர் ‘அஞ்சான்’ படக்குழுவினர்! இந்தப் பாடல் காட்சியுடன் படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்துவிட, விரைவில் அஞ்சானின் முதல் டீஸரை வெளியிடுவதற்கான வேலைகளும், அதை தொடர்ந்து ஆடியோவை வெளியிடுவதற்கான வேலைகளும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் ஏற்கெனவே திட்டமிட்டபடி சுதந்திர தினமான ஆகஸ்ட் 15- ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது! லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும் ‘யுடிவி’ நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;