விஜய்யுடன் மீண்டும் இணையும் டிஎஸ்பி.!

விஜய்யுடன் மீண்டும் இணையும் டிஎஸ்பி.!

செய்திகள் 2-Jun-2014 12:45 PM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிக்கும் ’கத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை, அதற்குள்ளாகவே அவர் அடுத்து நடிக்கவிருக்கும் படம் பற்றிய செய்திகள் தான் இப்போது மீடியாக்களில் றெக்கைக் கட்டி பறந்து கொண்டிருக்கின்றன! ‘கத்தி’க்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தினை சிம்பு தேவன் இயக்குகிறார் என்பதும், இப்படத்தில் வில்லனாக ‘நான் ஈ’ புகழ் சுதீப் நடிக்கிறார் என்பதும் முடிவான விஷயம்! இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார் என்று முதலில் தகவல்கள் வெளியானது. இப்போது ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார் என்றும், ஹன்சிகா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது குறித்து நமக்கு கிடைத்த உண்மையான தகவல்களின் படி இப்படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கவில்லையாம்! ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா முதலானோரிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பது உண்மை! ஆனால் அவர்கள் நடிப்பது குறித்து இன்னும் முடிவாகவில்லையாம்! அது மாதிரி இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தது! ஆனால் அவர் இல்லையாம்! விஜய் நடித்த 'சச்சின்' படத்திற்கு இசை அமைத்தவரும், தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக விளங்கி வருபவருமான தேவிஸ்ரீ பிராசாத் தான் இசை அமைக்க இருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;