காதலுக்கு வில்லியான ஹன்சிகா!

காதலுக்கு வில்லியான ஹன்சிகா!

செய்திகள் 2-Jun-2014 11:38 AM IST VRC கருத்துக்கள்

பிரபுதேவா இயக்கிய, ‘எங்கேயும் காதல்’ படத்திற்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்தை எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த லட்சுமண் இயக்கி வருகிறார். வழக்கமாக காதல் கதை என்றால் அதில ஒரு வில்லன் கேரக்டர் இருக்கதானே செய்யும்! ஆனால் இப்படத்தில் அப்படியொரு கேரக்டர் இல்லையாம்! படத்தில் ’ஜெயம்’ ரவி - ஹன்சிகா காதலுக்கு அவர்களே வில்லனாகவும், வில்லியாகவும் வருகிறார்களாம்! அதாவது, கதையில் நிகழும் திருப்பத்தால் படத்தின் இடைவேளைக்கு முன் ஹன்சிகா வில்லியாகவும், இடைவேளைக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி வில்லனாகவும் வருவது மாதிரியான வித்தியாசமான ஸ்கிரிப்ட் இது என்கிறார்கள்! படத்தின் ஹீரோ, ஹீரோயினே வில்லன் - வில்லியாக வந்து, இறுதியில் அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதே இப்படத்தின் மாறுபட்ட கிளைமாக்ஸாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;