இசைஞானி பிறந்த நாள் இன்று!

இசைஞானி பிறந்த நாள் இன்று!

செய்திகள் 2-Jun-2014 10:51 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமா மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் சிறந்த இசை அமைப்பாளர்களை எடுத்துக்கொண்டால் அவர்களில் இசைஞானி இளையராஜாவுக்கு தனி ஒரு இடம் இருக்கும்! இந்தியாவின் பெரும்பாலான மொழிகளிலாக, ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்து கோடானு கோடி இசை ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ள இசைஞானி பிறந்த நாள் இன்று! உலகப் புகழ்பெற்ற சிம்பொனிக்கு சென்று இசை அமைத்த முதல் இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு! ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இவரது இசையில் அமைந்த பாடல்களை, இசையை ஒலிக்க வைக்காத வானொலிகளோ, தொலைக்காட்சிகளோ இருக்க முடியாது என்பது நிச்சயம்! லட்சக்கணக்கான இசை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த் நாள் காணும் இளையராஜாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;