இயக்குனர் மணிரத்னத்துக்கு இன்று பிறந்த நாள்!

இயக்குனர் மணிரத்னத்துக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 2-Jun-2014 10:27 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவை இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவிலேயெ திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்களில் மணிரத்னமும் முக்கியமானவர்! 1983-ல் ‘பல்லவி அனுபல்லவி’ என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்த மணிரத்னம், அதைத் தொடர்ந்து இன்றைய மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் ‘உணரு’ என்ற மலையாள படத்தையும் இயக்கிய பிறகே தாய் மொழியான தமிழில் படங்களை இயக்கத் துவங்கினார்! ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியும், ஏராளமான கலைஞர்களை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியும் தனக்கு பெருமை சேர்த்தவர் மணிரத்னம்! இவரது அறிமுகங்களில் இன்று உலக அளவில் புகழ்பெற்று விளங்கி வரும் ஏ.ஆர்.ரஹ்மான், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்! தற்போது இந்திய சினிமாவே கொண்டாடும் மிகப் பெரிய இயக்குனரான மணிரத்னம் பிறந்த நாள் இன்று! அவர் இன்னமும் தரமான, ஏராளமான வெற்றிப் படங்களை தரவேண்டும் என்பதே நமது அவா! இன்று ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் வாழ்த்துக்களுடன் பிறந்த நாள் காணும் மணிரத்னத்துக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரு உச்சத்துல இருக்காரு - டிரைலர்


;